உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி : புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் நடத்திய திடீர் சோதனையில், 1.1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் இளநிலை ஆய்வக அதிகாரி இளங்கோ, தொழிலாளர் துறை உதவி தொழிலாளர் ஆய்வாளர் ஆனந்தி, புதுச்சேரி தாலுகாவருவாய் ஆய்வாளர் சிவக்குமார், புதுச்சேரி நகராட்சி இளநிலைபொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 3 கடைகளில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்டா, ஸ்பூன் உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 கடைகளில் இருந்து 1,117 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கடைக்கு ரூ. 5,000, மற்ற இரு கடைகளுக்கும் தலா ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி