உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துப்பாக்கி சுடுதல் போட்டி கலெக்டர் பதக்கம் வழங்கல்

துப்பாக்கி சுடுதல் போட்டி கலெக்டர் பதக்கம் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் குலோத்துங்கன் பதக்கங்கள் வழங்கினார். புதுச்சேரி ஷூட்டிங் (துப்பாக்கி சுடுதல்) சங்கம் சார்பில் 9வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடந்தப்பட்டன. அதில், பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் 82 பேர் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா தனியார் ஹோட்டலில் நடந்தது. விழாவிற்கு, சங்கத் தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.விழாவில், கலெக்டர் குலோத்துங்கன் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார். இதில், துணைத் தலைவர் கிஷோர்குமார், செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் பீர் முகமது, நிர்வாகிகள் அருண், பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை