உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ் சதுக்கத்தில் சிக்னல் பழுது நீக்கம்

ராஜிவ் சதுக்கத்தில் சிக்னல் பழுது நீக்கம்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி ராஜிவ் டிராபிக் சிக்னல் பழுது சரிசெய்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. புதுச்சேரி இ.சி.ஆர்., கோரிமேடு சாலை, வழுதாவூர் சாலை, காமராஜர் சாலை, நுாறடிச்சாலை சந்திக்கும் தட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இங்குள்ள சிக்னல் கடந்த மழையின்போது எரிந்து பழுதானது. சிக்னல்கள் இயங்காததால், டிராபிக்கை ஒழுங்குப்படுத்த முடியாமல் வடக்கு போக்குவரத்து போலீசார் சிரமப்பட்டனர். கூடுதலான போலீசார் மூலம் சிக்னல்களை இயக்கி வந்தனர். இந்த நிலையில், பழைய சிக்னல்களில் இருந்த டிராபிக் சிக்னல் விளக்குகளை கழற்றி வந்து ராஜிவ் சிக்னலில் பொருத்தி சிக்னலை இயக்க வைத்தனர். இதன் மூலம் நேற்று முதல் சிக்னல் வழக்கம்போல் செயல்பட துவங்கியது.போலீசார் கூறுகையில்; புதுச்சேரியில் ஏற்கனவே உள்ள பழைய சிக்னல்களை புதுப்பிக்க ரூ. 3 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு மாதத்தில் முடிந்து அனைத்து சிக்னல்களும் புது சிக்னல்களாக மாற்றப்பட உள்ளது என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ