உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு

சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு

புதுச்சேரி : தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை வழங்க, கலெகடர் குலோத்துங்கன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆலங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாம்களை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை