உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலை வாய்ப்பை தரும் தொழில்நுட்ப படிப்புகள் ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி முதல்வர் பால்ராஜ் அட்வைஸ்

வேலை வாய்ப்பை தரும் தொழில்நுட்ப படிப்புகள் ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி முதல்வர் பால்ராஜ் அட்வைஸ்

புதுச்சேரி : ''காலத்துக்கேற்ற தொழில்நுட்ப படிப்புகளில் கவனம் செலுத்தி படிப்பது வேலைவாய்ப்பை பிரகாசப்படுத்தும்'' என, கோவை ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் பால்ராஜ் பேசினார்.தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:மனிதனின் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே வருகிறது. நமது வாழ்க்கையில் எந்த தருணத்திலும் கூடவே வருகிறது. எனவே, காலத்துகேற்ற தொழில்நுட்ப படிப்புகளில் கவனம் செலுத்தினால் வேலைவாய்ப்பு பிரகாசமாகும்.பிளாக்செயின் தொழில்நுட்பம் இன்றைக்கு பெரிய வரபிரசாதமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் வாயிலாக வங்கி தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.இதேபோல், ஐ.ஓ.டி., எனப்படும், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் மனிதனின் அனைத்து கண்காணிப்புகளையும் எளிமையாக்கிவிட்டது. மனிதன் கம்ப்யூட்டர் டேட்டா பேஸில் தகவல்களை பதிவு செய்த காலம் மாறி, மிஷின்களே நேரடியாக டேட்டாவை பதிந்துவிடுகின்றன. இதன் மூலம், இண்டர்நெட் மற்றும் கிளவுட் வாயிலாக நடக்கும் தகவல் பரிமாற்றத்தினால், குடிநீர் குழாய், காஸ் சிலிண்டர் மூட மறந்து விட்டாலும் மூடி விடலாம்.இந்த தொழில்நுட்பம் தற்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் சிறந்த வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும். விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது ஒரு உருவகப்படுத்தப்பட்ட அனுபவமாகும். குவாண்டக் கம்ப்யூட்டிங் வளர்ந்து வரும் துறையாக உள்ளது.குவாண்ட இயற்பியல் கொள்கைகளை கொண்டு கோட்பாட்டு ரீதியாகவும், ஒளித்துகள், அணுக்கரு, அணு, அயனிப் பொறிகள், குவாண்ட மின்னியக்க பொறிகள், கருந்துளைகள் என வெவ்வேறு வகையான இயற்பியல் அமைப்புகளையும் கோட்பாட்டினையும் கொண்டு அமையக் கூடியக் கம்ப்யூட்டராகும்.இந்த புதிய துறையிலும் பிரகாசமாக எதிர்காலம் உண்டு. இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை தேர்ந்தெடுத்து படித்தால், வேலைவாய்ப்பு பிரகாசமாகும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை