உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம் 

சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம் 

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் சங்கம் உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில்  மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.  போராட்டத்திற்கு தொழிலாளர் காங்., தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அந்தோணி, உதயசங்கர், நேரு, தமிழரசன், ரவி, அய்யனார், தனசேகரன், ரகுபதி, சுகுணா, தமிழ்ச்செல்வி, வனஜா, சங்கீதா, பிரபு, பாஸ்கர் உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில், உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி சான்றிதழ் வழங்கிட வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கி, மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  தொடர்ந்து, சங்கத்தின் மூலம் ஆணையர் அருண் அய்யாவுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி