மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரி, சவராயலு நாயக்கர் அரசு பெண்கள் ஆரம்பப்பள்ளியில், 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் வரலட்சுமி சுகந்தி தலைமை தாங்கினார்.பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, பொது மக்களிடம் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்ளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்து அச்சிடப்பட்டிருந்தது.இந்த விழிப்புணர்வு ஊர்வலம், பாரதிபுரம், குபேர் நகர், பிரியதர்ஷினி நகர், பாரதி வீதி, நீடராஜப்பர் வீதி, செயின்ட் தெரேஸ் வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.