உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்விரோத பிரச்னையில் மாணவருக்கு வெட்டு

முன்விரோத பிரச்னையில் மாணவருக்கு வெட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்விரோத தகராறில் பாலிடெக்னிக் மாணவரை கத்தியால் வெட்டிய நான்கு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் ஜெயபால் மகன் ஹரிஷ்,18; இவர், லாஸ்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 2ம் ஆண்டு பயில்கிறார். கடந்த 5ம் தேதி இந்த பகுதியில் நடந்த ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் ஹரிஷிற்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன்,19; என்பவருக்கும் நடனம் ஆடிய போது பிரவீனுடைய கால் ஹரிஷ் மீது பட்டதால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.  இதை மனதில் வைத்து கொண்டு, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சோலை நகரில் நடந்து சென்ற ஹரிஷ், இவரது நண்பர்கள் பரணி,18; மற்றும் 17 வயதுள்ள சிறுவன் ஆகியோரை பிரவீன்,19; இவர் நண்பர்கள் ஹரிபகா, கிருஷ்ணா,19; காமேஷ்,19; ஆகியோர் திடீரென வழிமறித்து ஹரிைஷ திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, கிருஷ்ணா மறைத்து வைத்திருந்த கத்தியால், ஹரிைஷ வெட்டி விட்டு தப்பி சென்றார். தகவலறிந்த ஹரிஷ் தந்தை ஜெயபால், ஹரிைஷ மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஹரிஷ் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் கிருஷ்ணா, பிரவீன், காமேஷ், ஹரிபகா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ