மாணவன் மாயம் போலீசார் விசாரணை
புதுச்சேரி : மொபைலில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி பிச்சவீரன்பேட் புதுநகர், வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம், 46; சவுண்டு சர்வீஸ் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.இவரது மகன் பவித்திரன், 14; அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பவித்திரன் கடந்த சில நாட்களாக சரியாக பள்ளிக்கு செல்லாமல், மொபைல் போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால், நேற்று காலை 5:00 மணிக்கு வீட்டில் இருந்து டியூசன் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.