மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago
காரைக்கால் : காரைக்காலில் பள்ளி மாணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூர், தாராபுரம், நஞ்சியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்; டிரைவர். இவரது மனைவி லோகநாயகி. இவர்களின் மகன் ஹரிபிரதாப், 13. இவர், காரைக்கால், நிரவி, நேதாஜி நகரில் வசிக்கும் சித்தி சுமதி வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். விடுமுறை நாளில் மட்டும் அவரது சொந்த ஊர் சென்று பெற்றோரை பார்த்து வருவது வழக்கம்.கடந்த 26ம் தேதி ஹரிபிரதாப் பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருப்பதாக தாய் லோகநாயகி மற்றும் சித்தி சுமதி ஆகியோரிடம் தெரிவித்தார். அன்று இரவு அனைவரும் துாங்க சென்றனர். நேற்று முன்தினம் காலை சுமதி ஹரிபிரதாப் அறைக்குசென்று பார்த்தபோது, அவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.இதுக்குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். ஹரிபிரதாப் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவரை பெற்றோரை அழைத்து வரும்படி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், அச்சமடைந்த அவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago