உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை 

புதுச்சேரி: இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் அனிதா 35, இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி கணவர் இறந்து விட்டனர். இந்நிலையில் மதன் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் மனமுடைந்த அனிதா வீட்டில் இருந்து விஷத்தை எடுத்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை