மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
3 hour(s) ago
புதுச்சேரி: தமிழக பகுதியைச் சேர்ந்த வாலிபர் புதுச்சேரி லாட்ஜில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆராத்திரிவேலுார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேடசன் மகன் விஜயகுமார் 30, இவர் கடந்த 14ம் தேதி இரவு புதுச்சேரி அய்யனார் கோவில் வீதியில் உள்ள தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினார். அதன்பிறகு அவர் கீழே வரவில்லை. சந்தேகமடைந்த லாட்ஜில் வேலை செய்யும் ரூம் பாய் நேற்று காலை அவரது அறைக்கு சென்று பார்வையிட்டார்.அறை உள்பக்கமாக பூட்டி இருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது அவர் அறையில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து விடுதி ஊழியர் குமார் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago