மேலும் செய்திகள்
பிளம்பரை தாக்கிய 4 பேருக்கு வலை
18-Aug-2024
புதுச்சேரி: ரயிலில் அடிப்பட்டு இறந்த பூசாரியை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உருளையன்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுவாமிநாதன்,49; இவர் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் பூஜை செய்து வந்தார். இவர், மது குடித்து வந்ததால், இவருக்கும், இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு வெளியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 5:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில், சுவாமிநாதன், அடிபட்டு பலத்த காயத்துடன், உருளையன்பேட்டை அருகே உள்ள மாரியம்மன் நகரில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, அவரது மனைவி ருக்குமணி கொடுத்து புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18-Aug-2024