உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெ ட்டப்பாக்கத்தில் பேனர் அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

நெ ட்டப்பாக்கத்தில் பேனர் அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கத்தில் பேனர் அகற்ற சென்ற அதிகாரிகளிடம் பேனர் வைத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரியில் அதிகரித்த பேனர் கலாசாரத்தால் வாகன ஓட்டிகள், பாத சாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனை பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து, போலீஸ் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளமால் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நெட்டப்பாக்கத்தில் கும்பாபிேஷகம், பிறந்தநாள் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து போக்குவரத்து மிகுந்த சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர்.அதன்பேரில் பேனர்களை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நெட்டப்பாக்கத்தில் போக்குவரத்து மிகுந்த சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நேற்று காலை பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சென்றனர்.அங்கு பாதுகாப்பு பணிக்கு நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் சென்றனர். பேனர் அகற்ற சென்ற அதிகாரிகளை பேனர் உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதுதொடர்பாக அதிகாரிகள் யாரும் புகார் கொடுக்க முன் வரவில்லை. போலீசாரும் பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரவில்லை. இதுபோன்று நெட்டப்பாக்கம் தொகுதியில் தலைவிரித்தாடும் பேனர் கலசாரத்தை, தடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு என, அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை