மேலும் செய்திகள்
மிலாது நபி விடுமுறை மாற்றம்
10-Sep-2024
புதுச்சேரி : மிலாது நபி, வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.aமிலாது நபி பண்டிகை, வரும் 16ம் தேதி, அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 'செப்., 4 பிறை தென்பட்டது. அதனையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் வரும் 17 ம் தேதியும், மாகி பிராந்தியத்தில் வரும் 16ம் தேதியும் மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது.அதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மிலாது நபி விடுமுறை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களுக்கு வரும் 17 ம் தேதியும், மாகி பிராந்தியத்திற்கு வரும் 16ம் தேதியும் மாற்றம் செய்து உள்துறை சார்பு செயலர் ஹிரன் உத்தரவிட்டுள்ளார்.
10-Sep-2024