மேலும் செய்திகள்
மதுரை கோட்ட மேலாளர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு
08-Aug-2024
போலீஸ் ஸ்டேஷனில் டி.ஜி.பி., திடீர் ஆய்வு
27-Aug-2024
புதுச்சேரி: போலீஸ் ஸ்டேஷன் ஆய்வுக்கு சென்ற டி.ஜி.பி., ஷாலினி சிங்கிற்கு, பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். புதுச்சேரி டி.ஜி.பி.,ஆக ஷாலினி சிங் பதவியேற்ற பின்னர், ஒவ்வாரு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வடக்கு பகுதி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, கோரிமேடு, சேதராப்பட்டு ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் நேற்று டி.ஜி.பி., ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆய்வுக்காக டி.ஜி.பி., நேற்று சென்றார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த பெண்கள், டி.ஜி.பி.,க்கு ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, அவர், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த பதிவேடுகள், ஆயுத அறை, குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு அறை, போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள், குற்றச் செயல்களின் நிலவரம், போன்றவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, குற்றம் தொடர்பான பதிவுகளை, உடனே பதிவு செய்ய வேண்டும் என போலீசாரிடம் அறிவுறுத்தினார்.
08-Aug-2024
27-Aug-2024