உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாயமான மணல் மூட்டைகள் ஆட்டையை போட்ட அரசு ஊழியர்

மாயமான மணல் மூட்டைகள் ஆட்டையை போட்ட அரசு ஊழியர்

புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள ஏரி, நீர்வரத்து வாய்க்கால், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளை பராமரிக்கும் அரசு அலுவலகத்தில், எதிர்வரும் பருவமழை காலத்தில் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்காக நுாற்றுக்கணக்கில் மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.இந்த மணல் மூட்டைகள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்தது. விரல் விட்டும் எண்ணும் அளவில் மட்டுமே மணல் மூட்டைகள் உள்ளது.அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது உறவினர் வீடு கட்டுமானத்திற்காக மணல் மூட்டைகளை விடுமுறை நாட்களில் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.ஏரி, ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய மணல் மூட்டையை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை