உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் விட்டு சென்ற பைக் உரியவரிடம் போலீசார் ஒப்படைப்பு

போதையில் விட்டு சென்ற பைக் உரியவரிடம் போலீசார் ஒப்படைப்பு

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் பகுதியில் குடிபோதையில் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைந்தனர். விழுப்புரம், வளவனுார் அடுத்த சின்ன குப்பம் காலனியை சேர்ந்த சச்சிதானந்தம், 35; கூலி தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பருடன், சேதராப்பட்டு பகுதிக்கு பிறந்தநாள் விழாவிற்கு சென்றுவிட்டு, அங்கு மது அருந்திவிட்டு இரண்டு பைக்குகளில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். காட்டேரிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட அமட்டன்குளம் பகுதியில் வந்தபோது, இருவரும் பைக்கை நிறுத்திவிட்டு, இயற்கை உபாதை கழித்துள்ளனர். பின்னர், சச்சிதானந்தம் குடிபோதையில் தான் கொண்டு வந்த பி.ஓய் 05 வி 2991 பைக்கை போதையில் மறந்து விட்டுவிட்டு நண்பருடன் ஒரே பைக்கில் வீட்டிற்கு சென்று விட்டார்.இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக பைக் ஒன்று அதே இடத்திற்கு நிறுத்தியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் குமாரபாளையத்தை சேர்ந்த ஜெய்சங்கர் நேற்று காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் பைக் பதிவெண்ணை மூலம் உரிமையாளரான சச்சிதானந்தத்தை தொடர்பு கொண்டுடனர். அப்போது, சச்சிதானந்தம் பைக்கை நிறுத்திய இடம் தெரியாமல் தேடி கொண்டு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, அவரை காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து, ஆவணங்களை சரிபார்த்து பைக்கை அவரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !