உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி மீண்டும் செயல்பட துவங்கியது

போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி மீண்டும் செயல்பட துவங்கியது

திருக்கனுார், : திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி எண் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் இயங்கி வந்த 0413-2688435 தொலைபேசி எண், போலீஸ் மூலம் மாதந்திர பில் தொகையை முறையாக செலுத்திய நிலையில், பி.எஸ்.எஸ்.எல்., நிர்வாக குளறுபடி காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன், 'இன்கமிங் கால்' வசதி தடைப்பட்டது.இதனால் பொதுமக்கள் பிரச்சனைகள் தொடர்பாக தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலி மற்றும் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா முயற்சியின் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி எண் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ