கஞ்சி காய்ச்சும் போராட்டம்
புதுச்சேரி: தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கஞ்சி காய்ச்சும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (நரேகா) கீழ் பணியாற்றும் ஊழியர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களில் தங்களை பணி அமர்த்த வேண்டும்.நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊழியர்கள் சங்கத்தினர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எதிரே கடந்த 5ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, 9 வது நாளாக ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் நுாதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சங்க தலைவர் வேலுமணி, செயலாளர் முனுசாமி தலைமையில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.