உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது

பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது

புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் அருகே கத்திய காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.கருவடிக்குப்பம், இடையன்சாவடி சாலை, லட்சுமி நகர் அருகே நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி அப்பகுதி மக்களை மிரட்டினார். அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.லாஸ்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய முதலியார்பேட்டை, தியாகு முதலியார் வீதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ரவுடி பூபதி, 28; கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். ரவுடி பூபதி மீது வெடிகுண்டு, மாமூல் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை