உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீர்த்தவாரி ஏற்பாடு ஆணையர் ஆய்வு

தீர்த்தவாரி ஏற்பாடு ஆணையர் ஆய்வு

அரியாங்குப்பம் : வீராம்பட்டினத்தில் வரும் 14ம் தேதி நடக்கும் மாசி மக தீர்த்தவாரிக்கு பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் அடிப்படை வசதிகளை ஆணையர் ஆய்வு செய்தார்.வீராம்பட்டினம் கடற்கரையில்,மாசி மக தீர்த்தவாரி விழா, வரும் 14ம் தேதி நடக்கிறது. தீர்த்தவாரிக்கு வீராம்பட்டினம், அரியாங்குப்பம், மணவெளி, நோணாங்குப்பம், தவளக்குப்பம், முருங்கப்பாக்கம், நல்லவாடு, அபிேஷகப்பாக்கம், டி.என்.,பாளையம் உட்பட பல பகுதி கோவில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருள்வர்.தீர்த்தவாரி விழாவையொட்டி, பந்தல் அமைக்கும் பணி, குடிநீர், சுகாதாரம், கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் ஆய்வு செய்தார். வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதால், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆணையர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ