உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவத்தில் நேற்று திருமஞ்சனம் நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராம நவமி முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் நடந்து வந்தது.ராமநவமி ஐந்தாவது நாளான நேற்று காலை 9.00 மணிக்கு நான்கு ஆயிரம் திவ்ய பிரபந்த சேவை நடந்தது. 10:30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். வரும் 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி