உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கியது

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கியது

காரைக்கால் : காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவக்கியது.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின், ரிஷப கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கொடிமரத்தில் உள்ள விநாயகருக்கு பல்வேறு வகையான திரவங்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பின், மகா தீபாரதனை நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 18ம் தேதி தியாகராஜர் ஊமத்தை நடனம். 19ம் தேதி ஐந்து தேர் திருவிழா நடக்கிறது. 20ம் தேதி தங்க காகம் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 21ம் தேதி தெப்ப திருவிழா, 22ம் தேதி தீர்த்த வாரி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !