உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது 

ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது 

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் நபர்களை போலீசார் கைது செய்தனர்.  பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஜ.பி. நகர் அருகே, இரண்டு பேர் தனித்தனியாக பொது மக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள்,  கடலுார் குறவன்பாளையத்தை சேர்ந்த கணேசன் 52;  பில்லாளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 40; என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, முள்ளோடை துணை மின் நிலையம் அருகே ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த கடலுார் முதுநகரை சேர்ந்த சிவா 21; என்பவரை போலீசார் கைது செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி