மேலும் செய்திகள்
வேளாண் மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி
10-Feb-2025
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி சார்பில், வேளாண் கடன் திட்டங்கள் குறித்து, விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் கல்லுாரி முதல்வர் மொஹமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர் மற்றும் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஸ்டேட் வங்கி மேலாளர் வாசுகி பங்கேற்று, விவசாய கடன் திட்டம் மற்றும் மானியம் குறித்து விளக்கமளித்தார். உதவி வேளாண் இயக்குனர் கிருஷ்ணன், வேளாண் அலுவலர் தினகரன், தொழில்நுட்ப மேலாளர் செல்வமுத்து, களப்பணி அதிகாரி நந்தினி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
10-Feb-2025