டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் இரு இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்களை ரவிக்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். வில்லியனுார் தொகுதி, வி.தட்டாஞ்சாவடி மற்றும் ஜி.என்.பாளையம்பேட் ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தது. அதையடுத்த, ஜி.என்.பாளையம்பேட் பகுதியில், மின்துறை சார்பில், ரூ. 31:80 லட்சம் திட்ட மதிப்பில் 315 கே.வி.ஏ., திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டது. மேலும், வி.தட்டாஞ்சாவடி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மர்களை ரவிக்குமார் எம்.எல்.ஏ., நேற்று இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவிப் பொறியாளர் சந்திரசேகரன், இளநிலைப் பொறியாளர் ஸ்டாலின், மின்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.