மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது..
10-Aug-2024
புதுச்சேரி: கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.உருளையன்பேட்டை கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று அந்த கடையில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், குட்கா பாக்கெட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். குட்கா விற்றது தாவீடுபேட் பகுதியை சேர்ந்த ராஜி, 39; லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயகுமார், 37, ஆகியோர் என தெரியவந்தது.அதையடுத்து, இருவரையம் போலீசார் கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
10-Aug-2024