| ADDED : ஜூன் 08, 2024 05:51 AM
செஞ்சி, : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.இரவு 11:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு எழிலரசி அலங்காரம் செய்யப்பட்டு சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.கலெக்டர் பழனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.