உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் சுரங்கப்பாதையில் தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் சுரங்கப்பாதையில் தற்கொலை

புதுச்சேரி: பாண்டி மெரினா சுரங்கப்பாதையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வம்பாக்கீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரை முகத்துவாரம் அருகே சுரங்கப்பாதை உள்ளது. அதன் அருகில் கடந்த சில நாட்களாக 40 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத நபர் சுற்றித்திரிந்தார். அவர், நேற்று காலை சுரங்கப்பாதையின் கம்பியில், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுரங்கப்பாதை சுவரில் கரி கட்டையால், தான் அனாதை; என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என, எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. ஒதியஞ்சாலை போலீசார் உடலை கைப்பற்றி கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை