மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
15 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
15 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
15 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
15 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய வளாகத்தில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர்கள் நிறுத்தும், ஏர் என்கிளேவ் தளத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் திறந்து வைத்தார்.இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படையுடன், இந்திய கடலோர காவல்படை இணைந்து செயலாற்றி வருகிறது. கடலோர காவல்படையினர் நவீன ரோந்து கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி தேங்காய்த்திட்டில் சிறிய ரக ரோந்து படகுகள் மூலம் ரோந்து பணி நடந்து வருகிறது.இந்திய கடலோர காவல்படை புதுச்சேரி அலுவலகம் மரக்காணம் முதல் கோடியக்கரை வரை பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறது. இந்திய கடலோர பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, புதுச்சேரி கடலோர காவல்படை பிரிவுக்கு 2 நவீன ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அரசு அனுமதித்தது. இதன் மூலம் கடலோர பாதுகாப்பு மற்றும் புயல் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட முடியும்.புதுச்சேரி விமான நிலைய டெர்மினல் கட்டடம் அருகே டாக்ஸி டிராக் உடன் கூடிய ஏர் என்கிளேவ் தளம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. சென்னையில் இருந்து காணொலி மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில்; இதன் மூலம் பேரிடர் காலத்தில் புதுச்சேரியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியும். 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு ஹெலிகாப்டர் வந்துள்ளது. மரக்காணம் முதல் கோடியக்கரை வரை பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுப்பட முடியும்' என்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago