மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
புதுச்சேரி: உப்பளத்தில் 2.50 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.உப்பளம் அம்பேத்கர் சிலை அருகே மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு துறைமுகம் செல்லும் பாதையில் வியாபாரம் செய்ய நகராட்சி அனுமதித்துள்ளது. இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.பைக்குகளில் வருவோர் பார்க்கிங் செய்வதில்லை. பைக்குகளில் நின்றபடியே மீன்களை பேரம் பேசி வாங்குகின்றனர். இதேபோல், வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்திவிட்டு, மீன் வாங்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2.50 கோடி ரூபாய் செலவில் மீன் மார்க்கெட் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.பணிகள் துவங்கிய நிலையில் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டிய இப்பணி ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு மாதத்திற்குள் முடிக்க வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. இத்திட்டத்திற்கு நிதி பிரச்னை காரணமாக இல்லை. இருப்பினும் சின்ன சின்ன விஷயங்களை காட்டி, கட்டடபணிகள் அனைத்துமே ஜவ்வாக இழுத்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செப்டம்பர் வரை நீட்டிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரை காத்திருக்காமல் பணிகளை வேகப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago