உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடைகள் மருத்துவ தின சிறப்பு சிகிச்சை முகாம்

கால்நடைகள் மருத்துவ தின சிறப்பு சிகிச்சை முகாம்

புதுச்சேரி, : புதுச்சேரியில், உலக கால்நடைகள் மருத்துவ தினத்தையொட்டி நடந்த சிறப்பு முகாமில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.உலக கால்நடைகள் மருத்துவ தினம், ஆண்டு தோறும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, டி.என்.பாளையத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் செல்வமுத்து தலைமை தாங்கினார். முகாமில் ஆடு, மாடு, கோழி ஆகிய செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து பவுடர், ஊட்டச்சத்து கரைசல், கால்நடைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்பட்டன.முகாம் ஏற்பாடுகளை, பிராணிகள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி