மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் சூரியன் எப்.எம்., நடத்திய, பாண்டி ராம் தங்க நகை மாளிகையின் நடிகர் விஜய் ஆண்டனி ரிதம் இசை நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த, 2007.,ல், புதுச்சேரியில் முதன் முதலாக துவங்கப்பட்ட பண்பலை என்ற பெருமை சூரியன் எப்.எம்.,க்கு உள்ளது. அந்த வகையில் ஆரம்ப காலம் தொட்டு, தற்போது வரை, சூரியன் எப்.எம்., பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, விளம்பரதாரர்கள் மற்றும் மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.மறைந்த பாடகர் பாலசுப்ரமணியத்தை அழைத்து கடலுாரில் மாபெரும் இசை நிகழ்ச்சியை முதன் முதலாக நடத்தியது. தற்போது, 6வது முறையாக, பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி பங்கேற்ற, ரிதம் இசை நிகழ்ச்சி, நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, உப்பளம் பழைய துறைமுகத்தில் நடந்தது. இதில், பாடகர்கள் ஏ.கே.டி., ஆதித்யா, பிரசன்னா, நாராயணன், விருஷா, மகாலிங்கம், சந்தோஷ், வினயா, ரேஷ்மா, ஸ்ரிஷா, ருக்க்ஷர், கிரிஷ் மனோஜ், ஜாஸ் உள்ளிட்டோர் பாடினர். விஜய் ஆண்டனி இசையமைத்து பிரபலமான ஆத்திசூடி, மஸ்காரா, நாக்கு முக்கா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பாடல்களை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago