மேலும் செய்திகள்
புதுச்சேரி பேராசிரியர் வீட்டில் 10 சவரன் நகை, பணம் கொள்ளை
13 hour(s) ago
அரசு பள்ளியில் புத்தக திருவிழா
15 hour(s) ago
டயாலிசிஸ் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கருத்தரங்கு
15 hour(s) ago
புதுச்சேரி: விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களை செல்வகணபதி எம்.பி., பாராட்டினார்.செல்லபெருமாள்பேட்டையில் அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 28 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மாணவி ஹரிணி, 458 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி தீக் ஷிதா 453 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவர் சித்தேஷ் அசோக் 446 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடம் பிடித்தனர். 450க்கு மேல் 2 பேர், 350 க்கு மேல் 22 பேர் மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை விவேகானந்தா கல்வி குழும தாளாளர் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா, துணை முதல்வர் மீனாட்சி ஆகியோர் பாராட்டினர்.
13 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago