உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோர்க்காடு தி ஸ்காலர் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

கோர்க்காடு தி ஸ்காலர் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த கோர்க்காடு தி ஸ்காலர் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.வில்லியனுார் அடுத்த கோர்க்காட்டில் தி ஸ்காலர் பள்ளி புதிதாக இந்த ஆண்டு திறக்கப்பட்டது. பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் பிரி.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற பள்ளி தலைவர் பழனிவேல், தாளாளர் சுரேஷ் ஆகியோர் கூறுகையில், தலைசிறந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தி, ஒவ்வொரு மாணவர் மீதும் தனி கவனம் செலுத்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவோம். இப்பள்ளியை புதுச்சேரியின் அடையாளமாக உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும்' என்றனர்.நிகழ்ச்சியில் பெற்றோர் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளை சேர்த்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், விபரங்களுக்கு 9943487999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை