உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளிர் தின விழா கொண்டாட்டம்

மகளிர் தின விழா கொண்டாட்டம்

பாகூர் : பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின், ஸ்கூல் ஆப் பிசியோதெரபி கல்லுாரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.எஸ்.பி., ரட்சனா சிங், புதுச்சேரி ரோட்டரி இன்டர்நேஷனல் உதவி கவர்னர் மேரி ஸ்ட்ரெல்லா ஆகியோர் பங்கேற்று பேசினர். ஸ்கூல் ஆப் பிசியோதெரபி கல்லுாரி இயக்குனர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று பெண்களின் சாதனைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை வலியுறுத்தும் விதமாக, கலாசார நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பாராட்டு விழா நடந்தது.பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை