மேலும் செய்திகள்
மது அருந்தியவர் மீது வழக்கு பதிவு
20-May-2026
அதிரடி காட்டிய Rajasthan Royals
29-Apr-2026
புதுச்சேரி: பொது இடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் இரவு நேரங்களில் மது குடிப்பதாக டி.நகர்., போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, பணியில் இருந்த போலீசார் அங்கு சென்றனர். பொது இடத்தில் மது குடித்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் செஞ்சி அடுத்த பெரும்பூண்டி பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ், 27; என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், போலீசார் அலெக்சை பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, போலீசார் அலெக்ஸ் கொடுத்த புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து கோகுல்ராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
20-May-2026
29-Apr-2026