உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.மேட்டுப்பாளையம் காஸ் குடோன் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் ரவிச்சந்திரன், 28; வெளிநாட்டில் வேலை செய்த இவர், சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி வந்தார். கடன் தொல்லை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட ரவிச்சந்திரன், கடந்த 3ம் தேதி வீட்டில் விஷம் குடித்துவிட்டு பைக்கில் சென்றார். காமராஜ் நகர், வாணிதாசன் வீதியில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை