மாடு மீது பைக் மோதி வாலிபர் பலி
பாகூர்: பாகூர் அருகே பசு மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.பாகூர், கன்னியக்கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மோகன்ராஜ் 26; கோர்க்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவர், சொந்த வேலையாக நேற்று வெளியே சென்று விட்டு மாலை 6:30 மணியளவில், முள்ளோடை - குருவிநத்தம் சாலையில் வீட்டிற்கு தனது டியுக் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.பரிக்கல்பட்டு சந்திப்பு அருகே சென்றபோது சாலையின் குறுக்கே சென்ற பசு மாட்டின் மீது பைக் மோதியது. துாக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் எதிரே வந்த கார் மீது மோதி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.