உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு கைதான 10 பேர் சிறையில் அடைப்பு

இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு கைதான 10 பேர் சிறையில் அடைப்பு

புதுச்சேரி: சொத்து தகராறில் இந்து முன்னணி நிர்வாகியை, கொலை செய்த அவரது உறவினர் உட்பட 10 பேரை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். எல்லைப்பிள்ளைசாவடி, சித்தானந்தா நகரைச் சேர்ந்தவர் துரை, 48; இந்து முன்னணி நகர செயற்குழு உறுப்பினர். இவர், கடந்த 22ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கிடைத்த தகவலின் பேரில், எல்லப்பிள்ளைச்சாவடி சூர்யா, 23; நாகராஜ், 25; குயவர்பாளையம் கவுதம், 20; ஸ்ரீநாத், 24; மணிமாறன், 22; திண்டிவனம் நரேஷ்குமார், 23; லாஸ்பேட்டை அருள்பிரகாஷ், 25; கோவிந்த சாலை கிருஷ்ணகுமார், 21; கொம்பாக்கம் டேனியல், 22, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், சூரியாவின் தந்தையான திருவேங்கடத்திற்கு 2 மனைவிகள். அதில், எல்லைப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் உள்ள தனது இடத்தின் முன் பகுதியை முதல் மனைவியின் மகளான ரேகாவிற்கும், பின்பகுதியை சூரியாவின் தாய் சித்ராவிற்கும் எழுதி கொடுத்துள்ளார். இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சூரியா தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 22ம் தேதி துரையை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய 4 கத்திகள், 3 பைக்குகள், 2 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை