10 சவரன் நகை மாயம்: போலீஸ் விசாரணை
புதுச்சேரி, : காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 32; இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று தனியார் ஆயில் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள் அன்பளிப்பாக 1 கிராம் தங்க காசு கொடுத்தனர்.அதை வீட்டில் இருந்த அலமாரியில் திறந்து வைக்கு போது அதில் இருந்து தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகை கள் காணாமல் போயிருந் தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் வீட்டில் இருந்தவர்கள் என பலரிடம் விசாரித்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. திருடு போன நகைகளின் மதிப்பு 5 லட்சம் ஆகும்.கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.