உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 11 நாளில் 1,008 பேர் தகுதி

 எஸ்.ஐ., பணிக்கான தேர்வு 11 நாளில் 1,008 பேர் தகுதி

புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 11ம் நாள் உடற்தகுதி தேர்வில் 246 பேர் மட்டுமே பங்கேற்றனர். போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 16 ஆயிரத்து 481 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் 12 ஆயிரத்து 378 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் கடந்த 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், முதல் 10 நாட்களில் 915 பேர் தேர்வாகினர். இதையடுத்து 1 1ம் நாளான நேற்று ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். 246 பேர் பங்கேற்றனர். அதில் 93 பேர் தேர்வாகினர். இதுவரை 11 நாட்களில் மொத்தம் 1,008 பேர் மட்டுமே தேர்வாகி அடுத்த மாதம் நடக்கவுள்ள எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து 12ம் நாளான நாளை ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை