மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று: நவ. 17
17-Nov-2026
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்தில் 100வது ஆண்டு சித்தி தினத்தையொட்டி, நேற்று அரவிந்தர் அறையை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரி, மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்த அரவிந்தர், 1926ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பொன்னொளி பூமிக்கு வந்ததை உணர்ந்து, ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்த நாளை ஆசிரமம் நிறுவும் தினமாக அறியப்பட்டு, ஆண்டுதோறும் அரவிந்தர் சித்தி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 100வது ஆண்டு அரவிந்தர் சித்தி தினம் நேற்று ஆசிரமத்தில் நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு ஆசிரம உறுப்பினர்களின் கூட்டு தியானம் நடந்தது. தொடர்ந்து, அரவிந்தர் வாழ்ந்த அறை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்காக மதியம் 12:00 மணி வரை திறந்து வைக்கப்பட்டது. இதில், பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, அரவிந்தரின் அறையை பார்வையிட்டு, தரிசனம் செய்தனர்.
17-Nov-2026