உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று காலை 108 லிட்டர் தயிர், இளநீர் அபிஷேகம் நடக்கிறது.புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 லிட்டர் தயிர் மற்றும் இளநீர் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி