மேலும் செய்திகள்
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
17-Feb-2025
மாசி மக தீர்த்தவாரி விழா சுவாமிகளுக்கு வரவேற்பு
14-Mar-2025
புதுச்சேரி: தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு தசகலச மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த14 ம் தேதி நடந்த மாசி மகம் தீர்த்தவாரியில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் பங்கேற்றார். தீர்த்தவாரிக்கு பிறகு, புதுசாரம் சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில் தங்கி அருள்பாலித்து வந்தார்.சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொய்யாமொழி விநாயகருக்கு, சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், நேற்று காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், தச கலசம் மற்றும் 108 சங்கு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழா குழு தலைவர் ரவி, பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் ரவி, நிர்வாகிகள் அண்ணாதுரை, வேலவன, முருகன், பன்னீர் ஆகியோர் செய்திருந்தனர்.
17-Feb-2025
14-Mar-2025