உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் 

அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் 

புதுச்சேரி : கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நேற்று நடத்தது. புதுச்சேரி, கருவடிக்குப் பம் இடுகாட்டில் சந்திரமதி தாயார் உடனுறை அரிச்சந்திரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது . இக்கோவிலில் பரிகார தோஷங்கள் தீர்க்கும் மயான காளிக்கு கலசாபி ேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் புண்ணியாதனம் ஹோமம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்திர ஹோமம் , பூர்ணாஹூதி, திபாராதனை, அரிச்சந்திரன், சந்திரமதி, யோகிதாஸ் நித்திய பூஜை, இரவு மகா பைரவர் மற்றும் பைரவிக்கு வடுக பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, பஞ்சபூத பூஜை, மகா ஏகதச ருத்ர ஹோமம், மகா காளி ஹோமம், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தோஷங்கள் தீர்க்கும் பரிகார மயான காளிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய பரிபாலகர் ரவி, நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், தினேஷ் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை