உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  11 பேரிடம் ரூ.6.85 லட்சம் அபேஸ் :சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

 11 பேரிடம் ரூ.6.85 லட்சம் அபேஸ் :சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் 11 பேரிடம் ரூ. 6.85 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். குயவர்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரேடிங் விளம்பரங்களை பார்த்தார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி அவர், மர்ம நபரின் கணக்கிற்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 337 ரூபாயை அனுப்பினார். பிறகு அவரால் லாப பணத்தை எடுக்க முடியாமல் ஏமாந்தார். இதேபோல் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 6 ஆயிரத்து 120 ரூபாய், குரும்பாபேட் லிங்கேஷ் 9 ஆயிரம், குயவர்பாளையம் நபர் 27 ஆயிரத்து 606, அதே பகுதி பெண் 53 ஆயிரம், மற்றொருவர் 54 ஆயிரத்து 590, வீராம்பட்டினம் நபர் 55 ஆயிரம், கணபதிசெட்டிகுளம் நபர் 8 ஆயிரத்து 799, கதிர்காமம் நபர் 23 ஆயிரம், அரும்பார்த்தபுரம் நபர் 22 ஆயிரம், மூலக்குளம் நபர் 5 ஆயிரத்து 894, என மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 386 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை