உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய 12 பேர் கைது

ஆபாசமாக பேசிய 12 பேர் கைது

 புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வினோத், 25, என்பவர் மது போதையில் கருவடிக்குப்பம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல், முதலியார்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் ரகளையில் ஈடுப்பட்ட  நவீன்குமார், 29;  கடலுார் சாந்தமூர்த்தி, 22; பாக்கியராஜ், 45; நவீன், 22; ஹரிபிரசாத், 28; மணிகண்டன், 41; ஸ்ரீதரன், 35; புதுக்குப்பம் இளையராஜா, 46; தவளக்குப்பம் கிருஷ்ணன், 44; விழுப்புரம் தமிழ், 20; அருண்குமார், 40,  ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்