உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை 13 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 13 பேர் கைது

லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இ.சி.ஆரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவு நீர் உந்து நிலையம் அருகில் குடிபோதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை விக்னேஷ்,40; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். சேதராப்பட்டு போலீசார் பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தனியார் சோப்பு கம்பெனி பின்புறம் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சேதராப்பட்டு சக்திவேல் மகன் புகழ்,20; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ஐ.டி.ஐ., சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, களம்காத்த மாரியம்மன் கோவில் அருகில் ரகளையில் ஈடுபட்ட பூத்துறை சத்யராஜ்,41; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் தக்ககுட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு குடிபோதையில் ரகளை செய்த மூலகுளம் ஆரோக்கியதாஸ்,46; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதேபோல், கனகன் ஏரிக்கரையில் குடிபோதையில் ரகளை செய்த சண்முகாபுரம் அறிவழகன்,33; ரெட்டியார்பாளையம் ராஜகணேஷ்,47; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் பாரதிதாசன் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த சரவணன், 45; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் கணகசெட்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளை செய்த பண்ருட்டி கடாம்புலியூர் சுரேஷ்,42; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் உப்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது எக்ஸ்போ மைதானத்தில் குடிபோதையில் ரகளை செய்த அரியாங்குப்பம் செந்தில்குமார்,41; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நுாறடி சாலை பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு குடிபோதையில் ரகளை செய்த முதலியார்பேட்டை விஜி,43; ஐயங்குட்டிப்பாளையம் செல்வராஜ்,38; ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். ஏனாம் போலீசார் நேற்று முன்தினம் தரியலத்திப்பா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளை செய்த பைவரபெலம் பெம்மாடி லோவரஜூ,33; பைபாஸ் சாலையில் ரகளை செய்த கோத்தபள்ளி வனுமு சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !